என்னது ஸ்டாலினா? நிஜமாவா? அட ஆமா.. குவியும் பாராட்டுகள்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றபின் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசின் நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முக்கியமாக, ஆட்சிப் பொறுப்பேற்றபின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி தற்போது கொரோனா தொற்றின் தாக்கமும் தமிழகத்தில் சற்று தணிந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று கூட்டத்தொடர் முடிவடைந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐடி கார்டு அணிந்திருந்தார். இதுகுறித்து திமுக உடன்பிறப்புகள் சிலாகித்து பேசி வருகின்றனர்.
No comments:
Post a Comment