10 மாசமா கொரோனா போகல.. சொந்த இறுதி சடங்குக்கு திட்டமிட்ட நோயாளி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 24, 2021

10 மாசமா கொரோனா போகல.. சொந்த இறுதி சடங்குக்கு திட்டமிட்ட நோயாளி!

10 மாசமா கொரோனா போகல.. சொந்த இறுதி சடங்குக்கு திட்டமிட்ட நோயாளி!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. பிரிட்டனில் ஒரு நபர் 10 மாதங்களாக கொரோனாவில் இருந்து குணமடையாமல் அவதிப்பட்டு வருகிறார்.

பிரிட்டனில் உள்ள பிரிஸ்டோல் பகுதியை சேர்ந்தவர் டேவ் ஸ்மித். இவருக்கு வயது 72. இவர் கடந்த 10 மாதங்களாக கொரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்கு 43 முறை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், ஏழு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், தனது இறுதி சடங்குக்கே திட்டமிட்டு வருகிறார் டேவ் ஸ்மித். அவர் பிபிசி ஊடகத்திடம் பேசியபோது, “நான் ஓய்வுபெற்றுவிட்டேன். எனது குடும்பத்தினரை அழைத்து அனைவரிடமும் பேசிவிட்டேன். எல்லாரிடமும் குட்பை சொல்லிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த ரீஜெனரான் நிறுவனம் உருவாக்கிய ஆண்டிபாடி காக்டெயில் வழங்கப்பட்டது. இம்மருந்துக்கு பிரிட்டனில் அனுமதி அளிக்காவிட்டாலும் கருணை அடிப்படையில் டேவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
இம்மருந்தை சாப்பிட்டு 45 நாட்களுக்கு பின் டேவ் ஸ்மித் குணமடைந்தார். அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின் 305 நாட்களுக்கு கொரோனாவுடன் அவதிப்பட்ட பின் குணமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad