சுக்குநூறாக நொறுங்கி விழுந்த விமானம்.. பயணிகள் பரிதாபமாக பலி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

சுக்குநூறாக நொறுங்கி விழுந்த விமானம்.. பயணிகள் பரிதாபமாக பலி!

சுக்குநூறாக நொறுங்கி விழுந்த விமானம்.. பயணிகள் பரிதாபமாக பலி!

ரஷ்யாவில் தென்மேற்கு சைபீரியாவில் உள்ள் கெமெரோவோ பகுதியில் சிறு விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனாய் விமானத் தளத்துக்கு அருகே L-410 விமானம் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துவிட்டதாக முதலில் ஊடக செய்திகள் வெளியாகின. பின்னர் 4 பேர் மட்டும் உயிரிழந்துள்ளதாக தெளிவுபடுத்தப்பட்டது.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மிகக் கடுமையாக சேதமடைந்து நொறுங்கிக் கிடக்கும் விமானத்தின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக ரஷ்ய சிவில் ஏவியேஷன் ஏஜென்சியின் சைபீரிய பிரிவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், தேடுதல் பணிகள் குறித்த விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad