ஸ்ட்ராபெரி நன்மைகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 15, 2021

ஸ்ட்ராபெரி நன்மைகள்

ஸ்ட்ராபெரி நன்மைகள்


வயிறு சம்பந்தமான பிரச்சனை நீங்க:

ஸ்ட்ராபெரியில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் ஸ்ட்ராபெரி பழத்தினை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். வயிற்று குடலில் ஏற்படும் நோய்களை நீக்கி குடல் பகுதிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மற்றும் சீராக செயல்படுவதற்கும் ஸ்ட்ராபெரி பழம் மிகவும் உதவியாக உள்ளது.

தலை முடி பிரச்சனையை சரி செய்ய:

இப்போது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி சமமாக முடி உதிர்வு பிரச்சனை உள்ளது. ஸ்ட்ராபெரியில் வைட்டமின் எ சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்டு வரலாம். 

கண் பார்வை திறன் அதிகரிக்க

ஸ்ட்ராபெரியில் இருக்கக்கூடிய வைட்டமின் சாதுக்கள் நம்முடைய உடல் நலத்திற்கும், கண் பார்வை திறனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஸ்ட்ராபெரி பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, பிற்காலத்தில் கண் மங்குதல் பிரச்சனையை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது. 

ஆண்மை குறைபாடு நீங்க:


உடலில் அதிக வெப்பத்தன்மை உள்ள ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகம். ஸ்ட்ராபெரியில் அதிகமாக குளிர்ச்சி தன்மை உள்ளன. உடலில் அதிக உஷ்ணம் உள்ள ஆண்கள் ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்டு வர விந்தணுக்களை பெருக்கி, அவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும் இந்த ஸ்ட்ராபெரி. 

இளமையுடன் தோற்றமளிக்க:


வயது முதிர்ச்சி ஆகும் போது ஆண், பெண் இருவருக்குமே தோலானது கடினமாகி சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஸ்ட்ராபெரி பழம் அதிகமாக சாப்பிட்டு வர உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி சருமத்தில் பளபளப்பினை ஏற்படுத்தும். மேலும் முக சுருக்கங்களை நீக்கி சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கும். 

No comments:

Post a Comment

Post Top Ad