கொரோனா மூன்றாம் அலை வரத்தான் போகுது.. எச்சரிக்கும் வல்லுநர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

கொரோனா மூன்றாம் அலை வரத்தான் போகுது.. எச்சரிக்கும் வல்லுநர்!

கொரோனா மூன்றாம் அலை வரத்தான் போகுது.. எச்சரிக்கும் வல்லுநர்!


கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா
மூன்றாம் அலை நிச்சயமாக வரும் என பிரிட்டனை சேர்ந்த வல்லுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் பிரிட்டன் உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவிட்டது. பிரிட்டனில் ஏற்கெனவே டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் தடுப்பூசி போடும் திட்டக் குழுவின் ஆலோசகர் பேராசிரியர் ஆடம் ஃபின் பிபிசி ஊடகத்திடம் பேசியபோது, பிரிட்டனில் டெல்டா வைரஸுக்கும், தடுப்பூசிகளுக்கும் இடையே உறுதியான போட்டி நீடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad