தடுப்பூசியால் கருவுறும் தன்மை பாதிப்பு? மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் மக்களுக்கு செலுத்தப்படும் எந்த தடுப்பூசியும் ஆண்மையையும், பெண்களின் கருவுறும் தன்மையையும் பாதிக்காது என மத்திய சுகாதாரத் துறை அமைச்கம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகளும், தவறான தகவல்களும், வதந்திகளும் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மாரடைப்பு ஏற்படும், ஆண்கள் ஆண்மைத் தன்மை இழந்து விடுவர், பெண்கள் கருத்தறிக்கும் தன்மையை இழந்து விடுவர் போன்ற பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், தடுப்பூசி குறித்து விளக்கமளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஆண் தன்மை இழப்பார்கள் என்றோ, பெண்கள் கருவுறும் தன்மையை இழப்பார்கள் என்றோ அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு முன்பு, அறிவியல் பூர்வமான சோதனைகள் செய்யப்பட்டு, விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு சோதனைக்காக செலுத்தப்பட்டு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என தெரிந்த பிறகே மக்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள இளைஞர்களும், புதிதாக திருமணம் முடித்தவர்களும் அச்சம் கொள்ளாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment