நாகலாந்தில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

நாகலாந்தில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

நாகலாந்தில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு


வட கிழக்கு மாநிலமான நாகலாந்தில், ஆயுதப் படைச் சட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி குழுக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஜம்மு - காஷ்மீர் மற்றும் அசாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரச்) சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், நாகலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமலில் உள்ள ஆயுதப்படை சட்டத்தை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை இந்த சட்டம் அமலில் இருக்கும்.


இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, டெல்லியில், நாகலாந்து முதலமைச்சர் ரியோ நெப்பியு சந்தித்து பேசிய 24 மணி நேரத்திற்குள் ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad