சசிகலா வேலைக்காரர்: சிவி சண்முகம் காட்டம்!
சசிகலா அதிமுக தொண்டர்களிடையே பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இது அக்கட்சியின் தற்போதைய மேலிடத்திற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் செல்போனில் பேசியவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா என்பவர் யார்? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும் என்று கேள்வி எழுப்பிய சிவி சண்முகம், அதிமுக யார் தயவிலும் இல்லை. அதிமுக யாரையும் நம்பி இல்லை. இது ஒன்றரைக் கோடி தொண்டர்களை நம்பியே இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment