பிளக்ஸ் பேனர் மேட்டர்.... நெல்லையை தொடர்ந்து தேனி அதிமுகவில் சலசலப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 10, 2021

பிளக்ஸ் பேனர் மேட்டர்.... நெல்லையை தொடர்ந்து தேனி அதிமுகவில் சலசலப்பு!

பிளக்ஸ் பேனர் மேட்டர்.... நெல்லையை தொடர்ந்து தேனி அதிமுகவில் சலசலப்பு!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல குழப்பங்கள் நிலவி தற்போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியை ஒற்றை தலைமையின்கீழ் வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து இபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் துவங்கியது.

இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் ஒற்றைத் தலைமையாக ஓபிஎஸ் தலைமையில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக மீனவரணி சார்பாக, அதிமுக மாவட்ட மீனவரணி செயலாளர் வைகை கருப்பு பங்களாமேடு பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்,அதில், 'அதிமுக என்னும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே... ஓபிஎஸ் உங்கள் தலைமையில் கழகத்தை வழிநடத்துவோம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் அந்த பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் இடம்பெறாதது தேனி மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad