யார் இந்த லட்சுமி ஐபிஎஸ் - கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 10, 2021

யார் இந்த லட்சுமி ஐபிஎஸ் - கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!

யார் இந்த லட்சுமி ஐபிஎஸ் - கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!


தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் முக்கிய அதிகாரிகளை பார்த்து பார்த்து திமுக அரசு நியமித்து வருகிறது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. தேர்தலுக்கு முன்பு தமிழக ஆளுநரிடம் அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக அமைச்சர்கள் மீது நீண்டதொரு ஊழல் புகார்கள் தொடர்பான பட்டியலை திமுகவினர் கொடுத்திருந்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்னரும் கூட திமுக ஆட்சியமைந்ததும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, அந்த புகார்கள் தற்போது தூசு தட்டப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி சாதாரண அரசு ஊழியர்கள் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, டெண்டர் முறைகேடு என ஊழல், முறைகேடுகள் குறித்த புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரே விசாரிப்பார்கள் என்பதால் ஸ்டாலின் அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.



அந்த வகையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமியை சமீபத்தில் தமிழக அரசு நியமித்தது. இவர் குஜராத்தில் அமித் ஷாவையே கைது செய்தவர் என்பதால் ஆளுங்கட்சி வட்டாரங்கள் நடுக்கத்தில் உள்ளனர். அதேபோல், ஐஜி அந்தஸ்தில் ஒரு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி லட்சுமி ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். 1997ஆம் ஆண்டு குரூப்1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பியாகப் பதவியில் அமர்ந்த லட்சுமி, எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஐபிஎஸ் அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்ட இவர், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகப் பதவி வகித்தார்.

அதன் பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கடந்த ஆட்சியில் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட லட்சுமிக்கு இந்த பொறுப்பை தமிழக அரசு வழங்கியுள்ளதால் முன்னாள் அமைச்சர்கள் கூடுதல் கலக்கத்தில் உள்ளனராம்.

No comments:

Post a Comment

Post Top Ad