தமிழக - கர்நாடக எல்லையில் திடீர் பதற்றம்; ஏராளமான போலீசார் குவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

தமிழக - கர்நாடக எல்லையில் திடீர் பதற்றம்; ஏராளமான போலீசார் குவிப்பு!

தமிழக - கர்நாடக எல்லையில் திடீர் பதற்றம்; ஏராளமான போலீசார் குவிப்பு!


கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் காவிரி ஆறு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றை சேமித்து வைக்கும் நோக்கில் கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணையும், தமிழகத்தில் மேட்டூர் அணை, கல்லணை, மேலணை மற்றும் தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. காவிரி நீரை இருமாநிலங்களும் பங்கீட்டு கொள்வதை உறுதி செய்யும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டெல்லி பயணத்தின் போது மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி தரக்கூடாது என்று பிரதமர் மோடியிடம்

ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதுதொடர்பான அனைத்து விவகாரங்களும் உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் நிலுவையில் இருக்கும் போது மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடுவது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். இந்த விஷயத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கர்நாடக அரசு உடனே பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் அணை கட்டப்படவுள்ள பகுதியில் ஆய்வு செய்ய நிபுணர் குழுவையும் அமைத்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கை முடித்து கொள்வதாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் திடீரென அறிவித்தது. நிபுணர் குழுவையும் கலைத்தது. மேகதாது விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடியான நிகழ்வுகளால் இருமாநில எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


அங்கு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமலிருக்க கிருஷ்ணகிரி எஸ்.பி சரண் தேஜஸ்வி தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லையை கடக்கும் வாகனங்கள் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad