பெண் போலீசை மிரட்டிச் சுற்றி நின்று வீடியோ எடுத்த திருச்சி மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

பெண் போலீசை மிரட்டிச் சுற்றி நின்று வீடியோ எடுத்த திருச்சி மக்கள்!

பெண் போலீசை மிரட்டிச் சுற்றி நின்று வீடியோ எடுத்த திருச்சி மக்கள்!திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர்ப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி பெண் ஆய்வாளர் கிரிஜா ராணி அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு தெருவின் உள்ள கடைக்குச் செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது நியாயம்தானா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மக்கள் கேள்வி எழுப்பி பெண் ஆய்வாளருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் ஆய்வாளர் நீங்கள் இப்படிக் கூட்டம் போடலாமா எனக் கூறி அருகிலிருந்தவர்களைத் தள்ளி நில்லுங்கள் என எச்சரித்து, அங்கிருந்தவர்களை கொரோனா பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்கச் சொல்லியுள்ளார்.

இதையடுத்து கிராம மக்கள் பெண் ஆய்வாளரைப் பார்த்து நாங்கள் அனைவரும் முக கவசம் அணிந்து உள்ளோம் உங்களால்தான் எங்களுக்கு கொரோனா பரவும் எனக் கூறி பெண் ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad