நாளுக்குநாள் அடங்கும் ஆட்டம்; மெல்ல திரும்பும் இயல்பு நிலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

நாளுக்குநாள் அடங்கும் ஆட்டம்; மெல்ல திரும்பும் இயல்பு நிலை!

நாளுக்குநாள் அடங்கும் ஆட்டம்; மெல்ல திரும்பும் இயல்பு நிலை!


புதுச்சேரியில் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போட்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு இரண்டாயிரத்தை தாண்டி வந்தது. மேலும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் 29 தாண்டியே இருந்து வந்தது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்தே காணப்பட்டு வருகிறது. அதேபோல் பலி எண்ணிக்கையும் சமீபகாலமாக 20க்கு கீழ் வந்தபடி உள்ளதால் இதனால் புதுச்சேரி மக்களுக்கு சற்று நம்பிக்கையான சூழல் எழுந்திருப்பதாகவே பார்க்க முடிகிறது.

அந்தவகையில் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 9,215 பேரை பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 470 நபர்களுக்கும், காரைக்காலில் 136 நபர்களுக்கும், மாஹேவில் 15 நபர்களுக்கும் , ஏனாமில் 19 நபர்கள் என மொத்தம் 640 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,09,079 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மேலும் புதுச்சேரியில் 8 நபர்களும், காரைக்காலில் 5 நபர்கள், மாஹேயில் 2 நபர்கள் என, 15 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,628 ஆக உயர்ந்து உள்ளது.

பஞ்சாயத்து முடிஞ்சது; இவங்க தான் பாஜக அமைச்சர்களா?

மேலும் 8,270 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99,181 நபர்கள் குணமடைந்துள்ளனர். புதுச்சேரியில், இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்து 729 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோர தாண்டவம் ஆடிய கொரோனா தாக்குதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டால் மட்டுமே வழக்கமான நிலை திரும்பும் சூழல் நிலவுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad