திருநங்கைகளுக்கு கை கொடுக்கும் தேனி மகளிர் போலீஸ்!
தேனி மாவட்ட எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஏழை-எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அனைத்து போலீசாருக்கும் அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாகத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஏழை-எளியோருக்கு பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்த சூழலில் பெரியகுளம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட 4 காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் அவர்களின் சொந்த செலவில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள் காய்கறி அரிசி உள்ளிட்டவற்றை 28 திருநங்கைகளுக்கு வழங்கினர்.
இந்த நிகழ்வில் பெரியகுளம் டிஎஸ்பி முத்துக்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு தங்கள் கைகளால் நிவாரண பொருட்களை வழங்கினார். இவர்களின் செயல் மாவட்டத்தில் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
No comments:
Post a Comment