கொரோனா நிதியை குடித்தே தீர்த்த குடும்ப தலைவன்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

கொரோனா நிதியை குடித்தே தீர்த்த குடும்ப தலைவன்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கொரோனா நிதியை குடித்தே தீர்த்த குடும்ப தலைவன்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!



கொரோனா நிதியை குடித்தே தீர்த்த குடும்ப தலைவன்... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை தாம்பரம் அடுத்த சாமியார் தோட்டம், 1வது தெருவில் வசித்து வருபவர்

சம்மரபுரி. இவர் தையல் தொழில் செய்து வருகிறார். மகா குடிகாரரான இவர் தினந்தோறும் உணவு கூட உண்ணாமல் வெறும் குடியிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் ஒரு மாத காலம் நிம்மதியாக சென்ற குடும்ப வாழ்க்கையில் மதுக்கடை திறந்ததும் மீண்டும் சுனாமி போல் பிரச்சனை எழுந்தது.

சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா நிவாரணமாக அரசு கொடுத்த 2000 ரூபாய் பணத்தை சம்மரபுரி பெற்றுக் கொண்டு மொத்த பணத்திற்கும் மதுவை குடித்து பணத்தை தீர்த்து விட்டார்.

கணவன் நிவாரண பணத்தை வாங்கிக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்கி வருவார் என வீட்டில் மாலை வரை காத்திருந்த மனைவிக்கு மிஞ்சியது என்னமோ ஏமாற்றம் மட்டுமே. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு கோட்டாட்சியர் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பதாகவும், கள்ள சாராய கலாச்சாரம் தலை தூக்குவதாகவும் கூறி தமிழக அரசு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகளை திறந்துள்ளது. மதுக்கடைகளை திறந்தாலும் பிரச்சினை, திறக்கவிட்டாலும் பிரச்சினை என்ற சூழலுக்கு மத்தியில் தாய்மார்கள் படும் அவதி பெரும் சோகம்தான்.

No comments:

Post a Comment

Post Top Ad