கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 4, 2021

கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு...

கோவிட் பாதிப்பு குழந்தைகள் பராமரிப்பு; மத்திய அரசு புதிய விதிமுறைகள் வெளியீடு...


கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக, மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.உத்தரவு

கோவிட் தொற்றால், 9,346 குழந்தைகள், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய், தந்தையரை பறிகொடுத்துள்ளனர். இத்தகைய குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலர் ராம் மோகன் மிஸ்ரா, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:பெற்றோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, உறவுகள் ஏதுமில்லாத குழந்தைகளை பராமரிக்க, சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ், தற்காலிக குழந்தை பராமரிப்பு மையங்களை, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, குழந்தைகளை பராமரிக்கும் நம்பிக்கைக்குரியவரின் விபரங்களை பெறும்படி, மருத்துவமனைகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும். பெற்றோரின் நிலையால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, மன நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவதற்கு, உதவி தொலைபேசி எண் வசதியை ஏற்படுத்த வேண்டும்.கலெக்டர்கள், மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு வசதிகளை கண்காணிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் குடும்ப சொத்துக்களின் விற்பனை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தடுக்க வேண்டும். இதற்கு பத்திரப் பதிவு அலுவலகம் அல்லது வருவாய் துறை வாயிலாக உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.பாதுகாப்பு

கோவிட் தொற்றால் அனாதையான குழந்தைகள் குறித்த விபரங்களை, நகர்ப்புறம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்நிர்வாகங்களிடம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு அறிவித்து உள்ள திட்டங்களை விளக்கி, உரிய பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad