கொரோனா தடுப்பு: உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்த தடுப்பூசிகள் என்னென்ன?
கொரோனா தடுப்பு: உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்த தடுப்பூசிகள் என்னென்ன?
உலகம் முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
அவற்றின் பெயர், பயன்படுத்தப்படும் நாடுகளின் விவரம்:
பைஸர் & பயோடெக்
பைஸர் கரோனா தடுப்பூசிகள் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்ட்)
உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜான்சன் & ஜான்சன்
சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாடர்னா
கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
சினோபார்ம்
சீனா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.
No comments:
Post a Comment