அடித்து கொலை செய்த சேலம் போலீஸ் மீது கொலை வழக்குப் பதிந்து பணியிலிருந்து நீக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

அடித்து கொலை செய்த சேலம் போலீஸ் மீது கொலை வழக்குப் பதிந்து பணியிலிருந்து நீக்கம்!

அடித்து கொலை செய்த சேலம் போலீஸ் மீது கொலை வழக்குப் பதிந்து பணியிலிருந்து நீக்கம்!


சேலம் மாவட்டத்தில் சோதனை சாவடியைக் கடக்க முயன்றவரை லத்தியால் தாக்கி கொலை செய்த போலீசாரை பணியிட நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சேலம் சரக டிஐஜி உத்தரவு பிறபித்துள்ளார்.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடையைத் தமிழ்நாடு அரசு திறந்துள்ளது. இதனிடையே மதுபிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று மதுபாட்டில்களை வாங்கி வருகின்றனர்


அப்படி ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை கிராமத்திற்குச் சென்று மது அருந்தி ஊருக்கு நேற்று திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே ஏத்தாப்பூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத்தை மறித்துச் சோதனை செய்தனர். அப்போது இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன்(45), சிவன் பாபு, சங்கர் ஆகிய மூன்றுபேரும் இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்துள்ளனர்.

இதனால் போலீசாருக்கும் முருகேசன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் அதிகரிக்கவே எஸ்ஐ பெரியசாமி மற்றும் உடனிருந்த போலீசார் குடிபோதையிலிருந்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரை பெரம்பால் தாக்கியுள்ளனர்.

தாக்கியதில் முருகேசன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதற்கிடையே முருகேசனை போலீசார் பெரம்பால் தாக்குவதை சக நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad