மாமியாரை கொலை செய்த மருமகன்: வக்கீல் நோட்டீஸ்தான் காரண்மா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன். இவர் மகள் முனீஸ்வரி(25). இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை(27) 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ராம்குமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை என்பது வாடிக்கையாக இருந்து வந்ததுள்ளது. இதனால் முனீஸ்வரி ராம்குமாரை பிரிந்து கடந்த 6 மாதங்களாக வாழ்ந்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரிடம் விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அப்பா வீட்டிலிருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகிலிருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள்(55) விலக்கியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராம்குமார் மாரியம்மாளை குத்தியுள்ளார்.
No comments:
Post a Comment