சிக்கப் போகிறாரா ஹெச்.ராஜா? சி.டி.ரவி கூறியது என்ன?
தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் கட்சி நிர்வாகிகளே என ஹெச்.ராஜா பழியைத் தூக்கிப் போட அது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.
பாஜக ஹெச்.ராஜா 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என ஹெச்.ராஜா கூறியதாக சொல்லப்படுகிறத
ஹெச்.ராஜாவின் கருத்தால் கொந்தளித்த நிர்வாகிகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு கூண்டோடு ராஜினமா செய்தனர். ஹெச்.ராஜா மீது காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், “தேர்தல் சமயத்தில் செலவுக்காக, கட்சி மேலிடத்திலிருந்து பெரும் தொகை அளிக்கப்பட்டது. அந்தப் பணத்தை பூத் கமிட்டிக்குக்கூட ஹெச்.ராஜா செலவழிக்கவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டார். சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டிவருகிறார் ஹெச்.ராஜா. எருமைப்பட்டியில் அவருக்கு சொந்தமாக 40 ஏக்கர் தோட்டம் இருக்கிறது. அங்கும் பண்ணை வீடு ஒன்றை எழுப்பிவருகிறார். இதற்குப் பணம் எங்கேயிருந்து வந்தது” என்றும் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்
No comments:
Post a Comment