"ரேசன் கடையில் அரிசி வாங்குவது போல மத்திய அரசிடம் தடுப்பூசி வாங்கும் நிலை” - டி.ஆர்.பாலு
பா.ஜ.க., ஆளும் மாநிலங்களுக்கே, அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக, நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலை தொடர்பாக, மத்திய தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலை, டெல்லியில், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டன. கொரோனா தடுப்பூசிகள் குறித்து மத்திய அரசிடம் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கே அதிக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
No comments:
Post a Comment