தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினால்... எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினால்... எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்!

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டினால்... எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர்!

நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் தமிழகத்தில் தற்போது வரை 64 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளதாக கூறினார்.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டவர்கள் புதுப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதனை பயன்படுத்தி 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர் குழந்தை தொழிலாளர்கள் குறித்து 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.குழந்தை தொழிலாளர்கள் ஊக்குவிப்பவர்கள் அல்லது அவர்களுக்கு வேலை வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த அமைச்சர், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால் நேரடியாக சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

மேலும் அரசு நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad