டாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

டாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க., தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களில், வரும் திங்கட்கிழமை முதல், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக, தமிழகம் முழுவதும் நாளை பா.ஜ.க., சார்பில் ஆரப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad