ஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

ஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்!

ஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்!பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. கூட்டணியில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியும் ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என ஜனதா தளம் தெரிவித்துள்ளது. மத்திய கேபினட் விரிவக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கேபினட்டில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென ஜனதா தள தலைவரும், நிதிஷ் குமாருக்கு நெருக்கமானவருமான ஆர்.சி.பி.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள் அனைவருக்கும் நரேந்திர மோடி அரசில் பங்கு பெற தகுதியானவர்கள்” என்று தெரிவித்தார்.

மக்களவையில் ஜனதா தளத்துக்கு 16 எம்.பிக்கள் இருக்கின்றனர். மாநிலங்களவையில் 5 எம்.பிக்கள் இருக்கின்றனர். எனவே, ஜனதா தளம் சார்பில் அமைச்சரவையில் பங்கு கேட்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அவர், “ஏன் கோரிக்கை விடுக்க வேண்டும்? இதெல்லாம் புரிதல் சம்பந்தப்பட்டது. இயற்கையாகவே எங்களுக்கு அமைச்சரவையில் பங்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad