டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 12, 2021

டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்

டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்


காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சிப்பதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இம்முயற்சியை தமிழக அரசு குறுக்கிட்டு தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் நிறுவனங்களான ONGC, OIL போன்றவற்றால் ஏற்கெனவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் இருக்கும் இடங்களாக அறியப்பட்ட வயல்களில் இருந்து ஹைட்ரோகார்பன் வளங்களை எடுத்து வருவாய் மேற்கொள்ள முடியாமல் இருந்த பகுதிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விட்டு வருவாய் பங்கீடு ஒப்பந்தம் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் Discovered Small Field Policy (DSF).

இந்த கொள்கை மூலம் 2016ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் 2018ஆம் ஆண்டில் ஒரு ஏலமும் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்டமாக 75 எண்ணெய் வயல்கள் 32 ஒப்பந்த பகுதிகள் மூலமாக ஏலம் விடப்படவுள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 13 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 230MMT ஹைட்ரோகார்பன் இதில் கிடைக்கும் என பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பில் காவேரி படுகையின் புதுக்கோட்டை மாவட்டம் வடதெரு பகுதியில் உள்ள 463.2 சதுர கிலோமீட்டர் பகுதியும் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் எவ்வித புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தெரிந்தும் கூட தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் ஏலங்களில் காவேரி டெல்டா பகுதிகளை மத்திய அரசு இடம்பெறச் செய்வது எதேச்சதிகாரமாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad