திருப்பதியில் மெகா சர்ப்ரைஸ்; பெரிய லிஸ்ட் போட்ட தேவஸ்தானம்!
திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் அறக்கட்டளை வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவஸ்தானத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களில் தகுதியுள்ள அனைவரும் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்தப்படுவர். இதன்மூலம் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் 15 ஆயிரம் ஊழியர்கள் பயனடைவர். திருமலையில் அனுமதி பெறாத கடைகள் அனைத்தும் அடுத்த ஒருவாரத்திற்குள் அகற்றப்படும். இதன்மூலம் பக்தர்கள் நடந்து செல்வதற்கு அதிகப்படியான இடவசதி உண்டாகும்.
தினசரி நெய்வேத்தியத்தில் இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கொரோனா நெருக்கடி மிகுந்த கடந்த 14 மாதங்களில் பல்வேறு பக்தி மயமான நிகழ்ச்சிகள் SVBC சேனலில் ஒளிபரப்பப்பட்டன. இவற்றை உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் கண்டு களித்தனர். புதிதாக கன்னட மற்றும் இந்தி மொழிகளில் SVBC பக்தி சேனல் உருவாக்கப்படும்.
No comments:
Post a Comment