கரண்டியை வைத்து அடித்த குமரி பெண்ணை இரணியல் போலீசார் கைது செய்தனர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

கரண்டியை வைத்து அடித்த குமரி பெண்ணை இரணியல் போலீசார் கைது செய்தனர்!

கரண்டியை வைத்து அடித்த குமரி பெண்ணை இரணியல் போலீசார் கைது செய்தனர்!


கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றொரு பெண்ணை கீழே தள்ளிவிட்டு பெரிய கரண்டியை வைத்து சரமாரியாகத் தாக்கும் காட்சி அப்பகுதி மக்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வேகமாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வைரலான வீடியோவை வைத்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் இச்சம்பவம் இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியில் நடைபெற்ற சம்பவம் என தெரிய வந்தது. இதையடுத்து இரணியல் போலீசாரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையில் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த புஷ்பம் என்பவருக்கும் அடுத்த வீட்டைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் இடையிலான முன்விரோதத்தால் கவிதாவைப் புஷ்பம் சரமாரியாகத் தாக்கியது தெரியவந்தது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இரணியல் காவல் நிலையத்தில் ஆஜரான கவிதாவிடம் போலீசார் விசாரித்தபோது நீண்ட நாட்களுக்கு முன்பே புஷ்பம் அண்டை வீட்டைச் சேர்ந்த தன்னோடும் சிவ மாலினி என்பவருடனும் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

எனவே முன்விரோதம் காரணமாகச் சிவ மாலினியை என்பவரைப் புஷ்பம் தாக்கியபோது தட்டிக் கேட்டதால் தன்னை கரண்டியால் அடித்து கீழே தள்ளி விட்டுத் தொடர்ந்து சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிவித்தார். தான் காயமடைந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

புஷ்பம் தனது பகுதியில் உள்ள பல பெண்களோடு பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. புஷ்பம் அப்பகுதி பெண்களைத் தாக்குவதில் எந்த தயக்கமுமின்றி தன் பலத்தைக் காட்டுவதாக இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து புஷ்பத்தின் மீது வழக்குப் பதிவு செய்த இரணியல் போலீசார் அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad