சிங்கத்துக்கு கொரோனா.. இந்தியாவிடம் உதவி கேட்ட இலங்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 18, 2021

சிங்கத்துக்கு கொரோனா.. இந்தியாவிடம் உதவி கேட்ட இலங்கை!

சிங்கத்துக்கு கொரோனா.. இந்தியாவிடம் உதவி கேட்ட இலங்கை!



தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவை சேர்ந்த இரண்டு சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. இதையடுத்து, விலங்குகளுக்கு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாநில அளவிலான பணிக் குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில், இலங்கையிலும் ஒரு சிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த சிங்கத்துக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே உள்ள தெகிவல உயிரியல் பூங்காவை சேர்ந்த சிங்கத்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், உணவு சாப்பிடாமலேயே இருந்துள்ளது. இதையடுத்து அந்த சிங்கத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொற்று இருப்பதை உறுதிசெய்வதற்காக மீண்டும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் சிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.



இதையடுத்து, சிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிகிச்சை தொடர்பாக இந்திய உயிரியல் பூங்காக்கள் ஆணையத்தை சேர்ந்த மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad