சுவையான ரவை பணியாரம் செய்வது எப்படி?
ரவை பணியாரம் செய்ய – தேவையான பொருள்:
- ரவை – 1 கப்
- மைதா மாவு – 1 கப்
- சீனி – 1 கப்
- ஏலக்காய் – 3
- எண்ணெய் – பொறிக்கத் தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
ஸ்டேப் 1: ரவை பணியாரம் செய்ய தனியாக ஒரு பாத்திரத்தில் ரவையினை எடுத்து நீரில் நன்கு ஊரும் பதத்திற்கு இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப் 2: அதனுடன் மைதா மாவு 1 கப், சீனி 1 கப், ஏலக்காய் – 3 அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவினை கையால் நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 3: சீனி இளகும் தன்மை கொண்டது என்பதால் மாவு நீர்த்துப் போய்விடும். ஆகவே தண்ணீரை மொத்தமாக ஊற்றி பிசையாமல் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையவும். பிசைந்த மாவானது இட்லி மாவு பதத்திற்கு வந்தால் தான் பணியாரம் சுடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.
ஸ்டேப் 4: அடுத்ததாக கடாயில் பணியாரம் பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய்யை சூடுபடுத்தவும்.
ஸ்டேப் 5: கடாயில் எண்ணெய் நன்றாக சூடேறியதும் பிசைந்து ரெடி செய்துள்ள மாவினை ஒரு கரண்டி அளவிற்கு எடுத்து எண்ணையில் ஊற்றவும். சிறுது நேரம் கழித்து வெந்த பிறகு திருப்பி போட்டு எடுக்கவும்.
ஸ்டேப் 6: அவ்ளோதாங்க டேஸ்டான ரவை பணியாரம் தயாராகி விட்டது. பணியாரம் நன்றாக ஆரிய பிறகு காற்றுப்போகாத பாக்சில் வைத்துக்கொள்ளலாம். இந்த ரவை பணியாரமானது 5 நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
No comments:
Post a Comment