தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 2, 2021

தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை...

தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை...


 தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மருத்துவ குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.முதல்வர் ஆலோசனை:தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசு நோய் பரவலின் காரணத்தை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. மாவட்டங்கள் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறார்கள். தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்துள்ளது.இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் ஒரு நாளைக்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு 490 என்ற அளவில் உள்ளது.இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினரை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர். ஜூன் 7ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் 4 நாட்களில் கொரோனா எந்த அளவுக்கு குறையும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து இந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad