இந்தியர்கள் வர அனுமதி.. கிரீன் சிக்னல் கொடுத்த துபாய்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

இந்தியர்கள் வர அனுமதி.. கிரீன் சிக்னல் கொடுத்த துபாய்!

இந்தியர்கள் வர அனுமதி.. கிரீன் சிக்னல் கொடுத்த துபாய்!

கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு இடையேயான பயணத்துக்கு துபாய் அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்தியா உள்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை துபாய் அரசு தளர்த்தியுள்ளது.

எனினும், துபாய்க்கு வருவோர் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என துபாய் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ரெசிடன்ஸ் விசா இருப்பவர்கள் மட்டுமே துபாய் வர அனுமதிக்கப்படுவர்.

இந்தியா மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் துபாய் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. ஜூன் 23ஆம் தேதியில் இருந்து இம்மூன்று நாடுகளில் இருந்தும் வரும் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Sputnik V, Astrazeneca (கோவிஷீல்டு), Sinopharm ஆகிய நான்கு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இவர்களிடம் ரெசிடன்ஸ் விசா இருக்க வேண்டியதும் அவசியம்.

No comments:

Post a Comment

Post Top Ad