இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 1, 2021

இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி

இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி



தன்னம்பிக்கை (Self Confident Child) என்பது ஒரு மனித நிலை. அது எந்த வயதிலும் வளர்த்து கொள்ள முடியும். அதுவும் பெரியவர்களிடமும், இளைஞர்களிடமும் ஏன் குழந்தைகளிடமும் கூட காணப்படும்.

ஆம் தன்னம்பிக்கை (Self Confident Child) மனோபாவம் குழந்தை பருவத்திலேயே தோன்றிவிடுகிறது.

குழந்தைக்கு பெற்றோர்கள் அளிக்க வேண்டிய நம்பிக்கைகள்:
தன் குழந்தை முதலாவது அடி எடுத்து வைக்கும் போது விழுந்து விடுவோம் என்ற பயம் உணர்வை மீறித்தான் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த அடி எடுத்து வைக்கும்படி ஊக்கம் அளிப்பது தாயின் கடமையாகும்.

தன் குழந்தையை ஓரடி ஈரடியாகக் காலடி எடுத்து வைக்க சொல்லி குழந்தையின் மனதில் உன்னால் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை (Self Confident Child) தாய் அளிக்க வேண்டும்.

அதேபோல் தன் குழந்தை கல்வியில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளது என்றால், கோவப்படாமல் இந்த முறை மதிப்பெண் குறைந்தால் என்ன, அடுத்த முறை மதிப்பெண் அதிகமாக எடுத்து கொள்ளலாம் என்று அன்புடன் நம்பிக்கை அளிக்க வேண்டும்.

மற்ற குழந்தைகளை வைத்து கொண்டு, உங்கள் குழந்தையை நீங்களே தாழ்த்தி பேசுவது மிகவும் தவறான செயலாகும். இந்த செயல் குழந்தையின் தன்னம்பிக்கையை உடைப்பது போன்ற செயலாகும்.

குழந்தையிடம் எதிர்மறையாக பேசுவதை தவிர்த்துக்கொள்வது மிகவும் நன்மையாகும். (நீ இப்படித்தான் தோல்வியடைவாய் என்று எனக்கு முன்பே தெரியும்) என்பது போன்ற பேச்சுக்களை தவிர்த்து விட்டு (இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்து பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்) என்று சொல்வது நல்லது.

அத்தோடு எப்படி பயிற்சி செய்ய வேண்டும், என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் குழந்தைக்கு செய்து காட்டுவது மிகவும் நல்லது.

போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள்.

மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.

மூன்றாம் பரிசுக்கு முயற்சி செய்த குழந்தை ஆறுதல் பரிசு தான் பெறுகிறது என்றாலும் கூட அதையும் பாராட்டுவது, அடுத்தடுத்து முயற்சிக்க குழந்தையை ஊக்கப்படுத்தும்.

சிறுசிறு பரிசுகளைப் பெற்ற குழந்தையின் மனம் நாளடைவில் ‘என்னாலும் பெரிய பரிசுகளைப் பெற முடியும்’ என்ற தன்னம்பிக்கையை (Self Confident Child) ஏற்படுத்திக் கொள்ளும்.

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என்பது குழந்தைக்கு தெரிவிக்க வேண்டும். அதாவது வெற்றியோ தோல்வியோ எது நடந்தாலும் செய்யும் காரியத்தை விட்டு விடக் கூடாது.

தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக் காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட, தான் தோல்வியடைந்த விசயங்களிலெல்லாம் தன் குழந்தைகளை வைத்து வெற்றியடைந்து கொள்ளும் மனப்பான்மையை பெற்றோர் விட்டுவிட வேண்டும்.

பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விசயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை (Self Confident Child) இல்லாமல் வளர்கின்றன.

அக்குழந்தைகள் பிற்காலத்தில் பெற்றோர்களை விட மோசமான தோல்வியாளர்களாக உருவாகின்றனர்.

தன்மீதான நம்பிக்கை தனக்காக செய்யும்போது தான் அதிகரிக்கும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் (Self Confident Child) முயற்சியில் ஈடுபடுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad