திருச்சி தேமுதி பிரமுகர் மரப் பட்டறையில் இரவு நேரத்தில் தீ விபத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

திருச்சி தேமுதி பிரமுகர் மரப் பட்டறையில் இரவு நேரத்தில் தீ விபத்து!

திருச்சி தேமுதி பிரமுகர் மரப் பட்டறையில் இரவு நேரத்தில் தீ விபத்து!



திருச்சி தஞ்சை சாலையில் அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கு உள்ளது. இந்த பங்க் அருகே திருப்பதி மரப்பட்டரை செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இரவு சுமார் 10 மணி அளவில் திடீரென குறிப்பிட்ட மரப்பட்டையிலிருந்து லேசான புகைமூட்டம் வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென மரப்பட்டரை முழுவதும் பரவிக் கொழுந்துவிட்டு எரிந்தது.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பீதியடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

மரப் பட்டறையில் மரங்கள் நிறைந்து இருந்ததால் தீ அந்த இடம் முழுவதும் பரவிக் கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தீப்பிடித்து எரிந்த மரப் பட்டறையில் உரிமையாளர்

தேமுதிக மாவட்டச் செயலாளர் கணேசஷ் எனத் தெரியவந்துள்ளது. திடீரென தீ பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





No comments:

Post a Comment

Post Top Ad