தேனி மாவட்ட போலீசார் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

தேனி மாவட்ட போலீசார் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்!

தேனி மாவட்ட போலீசார் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ்!


தேனி போலீஸ் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு, காவல் நிலையங்களை ஆய்வு செய்து வருகிறார். அதிகாரி பிரவீன் உமேஷ் செயல் மாவட்ட மக்களிடையே போலீஸ் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.



காவல் நிலையங்களை ஆய்வு செய்யும் பிரவீன் உமேஷ் பணியில் உள்ள காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். பிரவீன் உமேஷ், “பொதுமக்களிடம் கனிவாகவும் பொறுப்புடனும், கண்ணியத்துடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்வதால் போலீசார் மதிப்பை உயர்த்தும். ஒழுக்கமுடன், கடமை தவறாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பொதுமக்களுக்குச் சேவை புரிவதுதான் நமது கடமை” என்ற கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்.

குறிப்பாக அவர், போலீசார் உடல்நலனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். ஆரோக்கியத்திற்குப் பல நல்ல வழிமுறைகளைச் சொல்வதோடு தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கூறுவதால் எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் மீது மாவட்ட போலீசாருக்கு நல்ல மரியாதை ஏற்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad