கொங்கு மண்டலம்: ஆதரவாளர்களை நழுவ விட்ட செங்கோட்டையன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

கொங்கு மண்டலம்: ஆதரவாளர்களை நழுவ விட்ட செங்கோட்டையன்!

கொங்கு மண்டலம்: ஆதரவாளர்களை நழுவ விட்ட செங்கோட்டையன்!


அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள், தேர்தல் சமயத்தில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சிகளை நோக்கி செல்வதும், தேர்தலுக்கு பின்னர் என்றால் புதிதாக ஆட்சி பொறுப்பேற்கும் கட்சியை நோக்கிச் செல்வதும் எங்கும் காணக் கிடைக்கும் காட்சி தான்.

அந்த வகையில் திமுகவில் நேற்று மாற்றுக் கட்சியினர் இணைந்த நிகழ்வை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அதிமுகவின் கொங்கு மண்டலத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறியிருப்பது கவனிக்கத்தக்கது.
அதிமுகவின் மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஈரோடு எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஆர்.கந்தசாமி, எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் எஸ்.பி.ரமேஷ், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.சி.வரதராஜ், கோபி நகரச்செயலாளர் பி.கே.காளியப்பன் ஆகியோர் நேற்று காலை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.


அந்த சூட்டோடு மாலையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர். இணைந்த நிர்வாகிகள் அனைவரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக வலம் வந்தவர்கள்
சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம் திமுகவில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது செங்கோட்டையனின் வலது கரமாக வலம் வந்த சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad