தமிழகத்தில் மூடப்படும் 10,000 பள்ளிகள்; வெளியான ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முதல் அலை ஓய்ந்த நிலையில் நடப்பாண்டு இரண்டாவது அலையின் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கல்வி நிலையங்கள் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக பிரைமரி, நர்சரி பள்ளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றன.
ஏனெனில் கடந்த 2019ல் இருந்தே கல்வி கட்டணம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெற்றோர்களிடம் 75 சதவீத கல்வி கட்டணத்தை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் 25 சதவீத பள்ளிகள் கூட 75 சதவீத கட்டணத்தை பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் வாழ்விழந்து தவித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஒசூரில் பேசிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார், தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்து நிற்கின்றன. பல பள்ளிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை கட்ட வேண்டியுள்ளது. மேலும் 50 ஆயிரம் பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி, காப்பீடு, எப்.சி, சாலை வரி உள்ளிட்டவை செலுத்த வேண்டியிருக்கிறது.
ஏற்கனவே கல்வி கட்டணம் நிலுவையில் இருப்பதால் மேற்குறிப்பிட்ட வரிகளை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரைமரி, நர்சரி பள்ளிகளை நம்பியிருக்கும் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்விழுந்து தவிக்கின்றனர். எங்களின் நிலை தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளை நடத்துவதற்கு வாங்கிய கடனை கட்ட முடியாததால் 10 ஆயிரம் பிரைமரி, நர்சரி பள்ளிகளை மூடி விடுவது என முடிவு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment