Vijay இயக்குநர் மீது கடும் கோபம்: ஆளையே மாற்றும் விஜய்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

Vijay இயக்குநர் மீது கடும் கோபம்: ஆளையே மாற்றும் விஜய்?

Vijay இயக்குநர் மீது கடும் கோபம்: ஆளையே மாற்றும் விஜய்?


மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன.

பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் தளபதி 66 படம் குறித்து பேச்சு கிளம்பிவிட்டது. தளபதி 66 படத்தை நான் தான் இயக்கவிருக்கிறேன் என்று பிரபல தெலுங்கு இயக்குரநான வம்சி பைடிபல்லி பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த படத்தை தில் ராஜு தயாரிப்பதாகவும் கூறினார்.
தன் கையில் இருக்கும் பட வேலை முடியும் வரை அடுத்த படம் குறித்து அறிவிக்க மாட்டார் விஜய். இது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் பீஸ்ட் பட வேலையே முடியாத நேரத்தில், வம்சி பைடிபல்லி தளபதி 66 குறித்து உறுதி செய்தது விஜய்க்கு பிடிக்கவில்லையாம்

வம்சி பைடிபல்லி செய்த காரியத்தால் தளபதி 66 படத்தின் இயக்குநரையே மாற்றும் ஐடியாவில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தளபதி 66 படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad