உணவகங்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிடும் வசதி; பொதுமக்கள் ஜாலி!
தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக குறைந்து வருவதை ஒட்டி ஏராளமான தளர்வுகளை இன்று முதல் மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு பின்னர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 50 சதவீத வாடிக்கையாளர்கள் உடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடக்க வேண்டும். மதுபானங்கள் பரிமாறக் கூடாது.
பார்கள் மூடியே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக டெல்லியின் பிரபல உணவகங்களின் மேலாளர்கள் கூறுகையில், உணவக வளாகங்கள் தினசரி தூய்மைப்படுத்தப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது.
அப்போது முகக்கவசம் அணிந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது. கை சுகாதாரம், கையுறை அணிதல் ஆகியவையும் பின்பற்றப்படுகின்றன. கவுண்ட்டர்களில் ஷீல்டு அணிந்தபடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு டேபிளிற்கும், மற்றொரு டேபிளிற்கும் இடையில் போதிய இடைவெளி விடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து சற்று தூரத்தில் இருந்து தான் உணவு பரிமாறப்படுகிறது.
No comments:
Post a Comment