WTC Final: எங்ககிட்ட பயம் இல்ல, ஜெயிக்க இதுபோதாது…புஜாரா சரவெடி பேட்டி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 14, 2021

WTC Final: எங்ககிட்ட பயம் இல்ல, ஜெயிக்க இதுபோதாது…புஜாரா சரவெடி பேட்டி!

WTC Final: எங்ககிட்ட பயம் இல்ல, ஜெயிக்க இதுபோதாது…புஜாரா சரவெடி பேட்டி!

ஒருநாள், டி20 கிரிக்கெட்களுக்கு இணையாக டெஸ்ட் போட்டிகளைப் பிரபலப்படுத்த, 2019ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 2 வருடங்களாக இத்தொடர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இதற்கு இந்தியா, நியூசிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இப்போட்டி வருகிற ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல்முறையாக இத்தொடர் நடைபெறுவதால், எந்த அணி கோப்பையை தட்டித்தூக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இரு அணி வீரர்களின் பலம், பலவீனம் போன்ற விஷயங்கள் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்திய வீரர் சேத்தேஸ்வர் புஜாராவும், இறுதிப் போட்டி குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், “டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்து அணி இங்கிலாந்து மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இது நிச்சயம் அவர்களுக்குச் சாதகமான விஷயம்தான். நாங்கள் அனைத்திற்கும் தயாராக உள்ளோம். இறுதிப் போட்டியில் நிச்சயம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி விளையாடுவோம். கோப்பையை வெல்லும் அளவிற்கு முழுத்திறமையும் எங்களிடம் உள்ளது. எதைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. எங்களால் சிறப்பாக விளையாட முடியும். தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி எங்களை நாங்கள் தயார்ப் படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டபோது செய்த தவறுகளில் இருந்து நிறையப் பாடங்களை கற்றிருக்கிறோம். மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்ய வாய்ப்பில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நிதானம் மிக முக்கியம். கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக கடைப்பிடித்தனர். அதனால்தான் இறுதிப் போட்டி வரை வந்துள்ளோம்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “நியூசிலாந்து அணியில் இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் (போல்ட், வாக்னர்) இருக்கிறார்கள். இது இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதற்காக, அவர்கள் திறமையற்றவர்கள் என எடுத்துக்கொள்ள கூடாது. நிச்சயம் கடும் போட்டியளிப்பார்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு துறை பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்களைச் சமாளிக்க வழி தெரிந்தால் போதும். சுலபமாக எதிர்கொள்ளலாம்” என புஜாரா தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad