கோவையில் 10 தொகுதி வெற்றிக்காக 2 ஆம்புலன்ஸ் ஃபிரி: எஸ்பி வேலுமணி பெருமிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

கோவையில் 10 தொகுதி வெற்றிக்காக 2 ஆம்புலன்ஸ் ஃபிரி: எஸ்பி வேலுமணி பெருமிதம்!

கோவையில் 10 தொகுதி வெற்றிக்காக 2 ஆம்புலன்ஸ் ஃபிரி: எஸ்பி வேலுமணி பெருமிதம்!


கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு சட்ட அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது எஸ்பி வேலுமணி அதிமுக சார்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களைக் கோவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்பி வேலுமணி:
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்களுக்கான தனி அலுவலகத்துடன், சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக நூலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.
10 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தந்த மக்களுக்காக 2 இலவச ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவிருந்து மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad