தோப்பு, திமுகவில் ஒதுங்கினாரா, பதுங்கினாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

தோப்பு, திமுகவில் ஒதுங்கினாரா, பதுங்கினாரா?

தோப்பு, திமுகவில் ஒதுங்கினாரா, பதுங்கினாரா?


திமுகவை நோக்கி மாற்றுக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். அதிமுக, அமமுக, மநீம என பல கட்சி முக்கிய புள்ளிகளும் திமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் திமுகவின் சமீபத்திய வரவு தோப்பு வெங்கடாசலம்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே சுயேச்சையாக பெருந்துறை தொகுதியில் களமிறங்கினார். இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றவரால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெறமுடியவில்லை. இவர் ஒரு பக்கம் வாக்குகளைப் பிரித்தபோதும் அந்த தொகுதியில் அதிமுகவின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை.
மிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் திமுக ஒருமுறைகூட வெற்றி பெற்றிபெறாத தொகுதிகள் 4 உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர், விளவங்கோடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை. இந்த நான்கு தொகுதிகளையும் இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக கொடுத்தது. வழக்கம்போல் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகள் காங்கிரஸ் ஒதுக்கப்பட்டது. அந்த இரு தொகுதிகளும் காங்கிரஸ் வசமானது. கோவில்பட்டி தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அதிமுக கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். பெருந்துறை தொகுதி கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad