வலிமை அப்டேட் வெளியான 5 நிமிடத்தில் மதுரை அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

வலிமை அப்டேட் வெளியான 5 நிமிடத்தில் மதுரை அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

வலிமை அப்டேட் வெளியான 5 நிமிடத்தில் மதுரை அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

மதுரை மாவட்ட போஸ்டர்கள் பேனர்கள் என்றால் தனி அடையாளம் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. இப்படி மதுரையில் வைக்கப்படும் பேனர்களும் போஸ்டர்களும் தரமான சில வசனங்களைச் சுமந்து நிற்கும்.
குறிப்பிட்ட வசனத்திற்காகவே அந்த பேனரோ, போஸ்டரோ மாநிலத்தில் பேசப் பொருளாக உருவாகும். ஆனால் இப்போது ஒரு வினோதமான முறையில் அஜித் ரசிகர்கள் அச்சடித்துள்ள பேனர் மாநிலத்தில் மதுரை மீது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆம் மதுரையைச் சேர்ந்த அடங்காத அஜித் ரசிகர்கள் சங்கத்தினர் வலிமை அப்டேட் டீசரை தொடர்ந்து 5 நிமிடத்திற்குள் பேனர் அடித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியான நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கான அப்டேட் நேற்று மாலை 6 மணி அளவில் வெளியானது.


இந்த வலிமைப்பட அப்டேட் வெளியானதைத் தொடர்ந்து 5 நிமிடத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் காணப்பட்ட அஜித் போட்டோவை கொண்டு அவரது ரசிகர்கள் பேனர் அடித்தனர். மேலும் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வாருகின்றனர்.

அத்தோடு நிற்காமல் அடித்த பேனரை 2 பைக்களில் அமர்ந்து வாகனத்தை இயக்கியபடி அவரது ரசிகர்கள் அதை ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றனர். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad