தமிழ்நாட்டை 2 துண்டாகும் செய்தி விரைவில் வரும்: பாஜக கார்க்கியாயினி சர்ச்சை பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 11, 2021

தமிழ்நாட்டை 2 துண்டாகும் செய்தி விரைவில் வரும்: பாஜக கார்க்கியாயினி சர்ச்சை பேச்சு!

தமிழ்நாட்டை 2 துண்டாகும் செய்தி விரைவில் வரும்: பாஜக கார்க்கியாயினி சர்ச்சை பேச்சு!


கள்ளக்குறிச்சி மாடூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக தலைவர் பாலசுந்தரம், மாவட்ட மேற்பார்வையாளர் தடா பெரியசாமி தலைமையில் வழக்கறிஞர் செல்வநாயகம் முன்னிலையில் பாஜக கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.
இம்மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க வேண்டும், கல்வராயன்மலை பகுதியில் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையே ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலச் செயலாளர் கார்த்தியாயினியிடம் கேட்கப்பட்ட கொங்கு நாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “கொங்கு நாடு என்பதை பாஜக புதியதாகக் கொண்டு வரவில்லை. பொதுமக்களை எதிர்பார்க்கிற விஷயம்தான் அது. தமிழ்நாட்டில் கொங்கு மக்கள் அதிகமிருக்கும் பகுதியில் கொங்கு நாடு கொண்டு வரலாம் எனப் பொதுமக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.மக்கள் கருத்துதான் செய்தித்தாளில் வந்துள்ளது. அதற்கான உண்மையான செய்தியை மத்திய அரசு கொண்டு வரும் பட்சத்தில் அது நிச்சயம் வெளிவரும்” எனப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad