குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 5, 2021

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம்


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஒரே குடும்ப அட்டையில் கூட்டுக் குடும்பமாக பெயர்கள் வைத்திருப்போர்கள் தனியாக கார்டு கோரியும், புதிதாக திருமணம் செய்தோர்களும், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 1000 ரூ திட்டம் NPHH-S, NPHH-NC என்ற குறியீடு போட்டுள்ள கார்டுகளுக்கு கிடைக்காது. மற்ற குறியீடுகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே யாரும் தேவையின்றி பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad