டெல்லியில் நிலநடுக்கம் - பொதுமக்கள் பீதி!
டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்றிரவு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், இன்றிரவு 10:36 மணி அளவில், திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அலுவலங்கள், வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்ககத்தை பெரும்பாலான மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதில், யாருக்கும், காயமும், பொருட் சேதமும் ஏற்படவில்லை தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment