வன்னியர், சீர்மரபினர் 20% இடஒதுக்கீடு: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

வன்னியர், சீர்மரபினர் 20% இடஒதுக்கீடு: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

வன்னியர், சீர்மரபினர் 20% இடஒதுக்கீடு: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் துவங்கப்பட்ட நிலையில் வன்னியர்கள் 10.50% உள் இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், எம்பிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, '' அரசு பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிரபடுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றப்பட்டது.

அச்சட்டத்தின் அடிப்படையில், அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க சட்ட வல்லுநர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற பேரவையில் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இது மட்டுமின்றி இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும்.

என இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad