கொஞ்ச நாளைக்கு தடுப்பூசி முகாம் கிடையாது! - சுகாதார அமைச்சர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

கொஞ்ச நாளைக்கு தடுப்பூசி முகாம் கிடையாது! - சுகாதார அமைச்சர் தகவல்!

கொஞ்ச நாளைக்கு தடுப்பூசி முகாம் கிடையாது! - சுகாதார அமைச்சர் தகவல்!

கேரள மாநிலத்தில், அடுத்த சில நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்கள் கிடையாது என, அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா தொற்று ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தமிழகம், டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, அம்மாநில மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து பேட்டியளித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இன்று மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 5 பேர் ஜிகா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பூசிகள் குறித்த தரவை தொகுத்து வருவதால், அடுத்த சில தினங்களுக்கு, மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படாது என தெரிவித்தார்.

இதற்கிடையே, கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று மட்டும், 135 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad