திருப்பதியில் ஒரு ஜிலேபியின் விலை ரூ. 500..! ஆத்தாடி நான்கு மடங்கு உயர்வு
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருப்பாவாடை சேவை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பாவாடை சேவையின் போது புளியோதரை, பாயாசம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, ஆப்பம் மற்றும் பிற சுவையான பொருட்கள் தேங்காய்களுடன் படைக்கப்பட்டு வருகிறது.
இந்த தரிசனத்துக்காக டிக்கெட் வாங்கி வரும் பக்தர்களுக்கு ஜிலேபி மற்றும் தென்தொலா எனப்படும் முறுக்கு ஒரு செட் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், மிக குறைவான அளவில் மட்டுமே இந்த பிரசாதம் தயார் செய்யப்படும் நிலையில் அதன் விலையை தேவஸ்தானம் போர்டு நான்கு மடங்கு உயர்த்தி இனி ஒரு செட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், வியாழக்கிழமை மட்டுமே தயார் செய்யப்படும் இந்த பிரசாதத்திற்கு பக்தர்களிடம் டிமாண்ட் அதிகமானதால் விலையை உயர்த்தியுள்ளோம் என்றும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment