5 ஆண்டுகளில் ஏற்பட்ட மலக்குழி மரணங்கள் எவ்வளவு? - மத்திய அரசு பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

5 ஆண்டுகளில் ஏற்பட்ட மலக்குழி மரணங்கள் எவ்வளவு? - மத்திய அரசு பதில்!

5 ஆண்டுகளில் ஏற்பட்ட மலக்குழி மரணங்கள் எவ்வளவு? - மத்திய அரசு பதில்!

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணங்கள் கூட ஏற்படவில்லை என, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்பி வருவதால், நாடாளுமன்ற அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனித மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில், உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில், இது போன்ற சம்பவங்களால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என, தெரிவித்துள்ளது.

இதே கேள்வி, கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் எழுப்பப்பட்டிருக்கிறது. அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனித மலக் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, 340 பேர் உயிரிழந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய பாரதிய ஜனதா அரசின் மாறுபட்ட தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad