சென்னையில் கொரோனா அதிகரிப்பது ஏன்? - அமைச்சர் மா.சு விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

சென்னையில் கொரோனா அதிகரிப்பது ஏன்? - அமைச்சர் மா.சு விளக்கம்!

சென்னையில் கொரோனா அதிகரிப்பது ஏன்? - அமைச்சர் மா.சு விளக்கம்!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனையில் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எத்தனையை நிறைவேற்றி உள்ளனர் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தெளிவுபடுத்த வேண்டும். 3 மாதம் கூட முழுமை அடையாத அரசு செய்துள்ள நடவடிக்கைகளை மக்களே அறிவர். அ.தி.மு.க., 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து செய்யாததை 2 மாதமே ஆகியுள்ள அரசு செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும்?சென்னையில் ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் தான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக வருகிறது. அடுத்த வாரம் கிருஷ்ணகிரியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக கூடுதலாக 1,000 செவிலியர்களை நியமனம் செய்ய உள்ளோம். பெயரளவுக்கு மட்டுமே அம்மா கிளினிக் இருந்தது. அதனால் யாருக்கும் பலனில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad